பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்க்கும் இடையில் இன்று (22) முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஒண்றினைந்த தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூண்டுதலின் பேரில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விடயம் பலரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகின்றது.