ரோட்டராக்ட் கழகம் பீஸ் சிட்டி அட்டனின் ஏற்பாட்டில், கொழும்பு மிட்சிட்டி மற்றும் வத்தளை ரோட்டரி கழகங்களின் அனுசரனையுடன் நடைபெற்ற We are Covid Safe and Back to school எனும் செயற்திட்டங்களின் கீழ் இலங்கை பெறுமதி ரூபா 1,200,000 பெறுமதியான கை தொற்று நீக்கி பொதிகள், தொற்றுநீக்கிகள், கைசுத்திகரிப்பான், முககவசங்கள் போன்றவை நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலயத்தை சேர்ந்த 55 தூர பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு பொது சுகாதார பரிசோதகர் திரு.சரோன் பிரைன், ஆசிரியர்களுக்கான கொவிட் -19 தொடர்பான விழிப்புணர்வினையும் வழங்கி வைத்தார்.

இச் செயற்திட்டமானது மலையக பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி தொடர்வதற்கான ஓர் ஆதரவு அளிக்கும் முயற்சியாகும்.

க.கிஷாந்தன்



