தெமோதரை தோட்டத்திலுள்ள செளதம் பாடசாலைக்கு செல்ல மாணவர்கள் பயன்படுத்தும் மரகட்டைகளாலான பாலம் புதுப்பிக்கப்பட்டு பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானால் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இன்றைய மாணவர்கள் நம் நாட்டின் நாளைய சொத்துக்கள். மாணவர்களை பாதுகாத்து அவர்களை வழிநடத்த வேண்டியது நமது பொறுப்பாகும்.
தெமோதரை தோட்டத்திலுள்ள செளதம் பாடசாலை அதிக மழை காலப்பகுதியில் மரகட்டைகளாலான பாலத்தின் ஊடாக மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து செந்தில் தொண்டமானிடம் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று , இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களின் பாவணைக்கு கையளிக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டமானது செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.