பெங்களூரில் உள்ள தெரு நாய்களின் நலனைக் கருத்திற்கொண்டு மாநில மாநகராட்சி, புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
அந்த வகையில் தெருவில் வாழும் நாய்களுக்கு தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களின் அதிகரிப்பு மற்றும் அதன் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தெரு நாய்கள் மக்கள் வாழ்விடம் அருகே அதிகம் நடமாடுவதால், அவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும், இதன்மூலம் மனிதர்-விலங்கு இடையிலான நெருங்கிய உறவை நிலைநாட்ட முடியும் எனவும் கூறப்படுகிறது.