தெற்காசிய தொழிற்சங்க சமேளனத்தின் மகாநாடு கொழும்பில் நடைபெற்றது. இம் மகாநாட்டில் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இம் மகாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் உலகம் எதிர் நோக்கியுள்ள பொருளாதார சவாலில் தொழில்துறைகளும் தொழிலாளர்களும் பாதிக்காது ஒன்றிணைந்த அதெற்காசிய தொழிற்சங்கங்களின் சமேளனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தொழிற்சங்க தலைவரான ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து
பிவிருத்தியை நோக்கிய பயணமாக அது அமைய வேண்டும் என தெரிவித்ததாக அக்கட்சியின் உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
மகாநாட்டில் தெற்காசிய தொழிற்சங்க சமேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஹர்பஜன் சிங் அவர்களுக்கும் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட லக்ஷ்மன் பாஸ்னட் அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவாலில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளது கோவிட் நோய் தொற்று மற்றும் பொருளாதார சீர்குலைவின் காரணமாக பல தொழிலாளர்கள் விளக்க வேண்டிய ஒரு துர்பாக்கியமான சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் அவர்களது உரிமையையும் வென்றெடுப்பதில் என்றும் பின்னடைந்ததில்லை. தொழிலாளர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டாலும் நாம் அதற்கு உடனடியாக குரல் கொடுத்து அவர்களுடைய உரிமையை பாதுகாப்போம்.
தெற்காசியாவில் அதிகளவான தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகவும் வரைமுறைப்படுத்தப்படாத தொழிலாளர்களாகவும் காணப்படுவதுடன் அது தொடர்பாக உலகளாவிய தொழிற்சங்கம் என்ற வகையில் இங்குள்ள அனைவரும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பல மூத்த தொழிற்சங்க தலைவர்கள் இடையே இளைய தொழிற்சங்க உறுப்பினர்களாக பல அனுபவங்களை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம் அதன் மூலம் இலங்கை மாத்திரமன்றி தெற்காசிய ரீதியிலும் ஒரு பலமான நல்லுறவை நாம் பேண வேண்டும் என தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் அன்றி ஏனைய தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வேலை திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். தொழில் அமைச்சின் ஊடாகவும் ஐக்கிய நாடுகளள் ஸ்தாபனம் உலக தொழிலாளர் ஸ்தாபனம் உலக தொழிற்சங்க சமேளனம் போன்ற அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்த பயணம் என்ன இன்னும் பலப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
மாநாட்டில் பல நாடுகளின் தொழிற்சங்க தலைவர்கள் சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் இளம் தொழில் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை சார்பாக ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பொதுச் லெஸ்லி செயலாளர் தேவேந்திர ஐக்கிய தொழிலாளர் சமேளனத்தின் பொதுச் செயலாளர் பத்மஸ்ரீ மற்றும் இத்தோகா சார்பாக பாரத அருள்சாமி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்