தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி ராமந்தபூரில் உள்ள கோகுலேநகரில் தேரை இளைஞர்கள் இழுத்துச் சென்ற போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 9 பேர் மீது மின்சாரம் தாக்கியதாகவும் ,அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.