தெல்தோட்டை கிரேட்வெளி தோட்டத்தை தனியார் ஆக்கிரமிப்பு; தோட்டமக்கள் போர்க்கொடி!

0
171

கண்டி மாவட்டம் தெல்தோட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிரேட்வெளி தோட்டத்தில் மக்கள் தொழில் செய்யும் இடங்களை திடீர் என்று தனியார் ஒருவர் தனக்கு சொந்தமானது என நில அளவையாருடன் வந்து காணியை அளக்க முயற்சித்ததால் தோட்ட தொழிலாளர்களுக்கும் குறித்த நபருக்கும் வந்த குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தற்போது (18.10.2017) அமைதியின்மை தோன்றி உள்ளது.

a (1)

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. குறித்த தோட்டம் அரசாங்கத்தின் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையினால் நிர்வகிக்கபட்டு வருகின்றது. இந்த தோட்டத்தில் சுமார் இருநூறு குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். 120 தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்கின்றனர். தோட்டம் முறையாக நிர்வாகிக்கபடாததினால் தொழிலாளர்களுக்கு முறையான வேலையும் இல்லை வருமானமும் இல்லை. இதனால் பலர் தோட்டத்தை விட்டு வெளியில் வேலை செய்கின்றனர்.

a (6)

வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி உட்பட ஏனைய நிதிகள் கூட வழங்கபடவில்லை. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தோட்டத்தில் இல்லை. இதனால் மக்கள் நாளாந்தம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தோட்ட மக்களுக்கு காணி உட்பட கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை வழங்காத நிலையில் தோட்ட காணியை மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கி வருகின்றது. அவ்வாறு குத்தகைக்கு பெற்ற தனியார் முஸ்லிம் வர்த்தகர் இந்த காணியை அளக்க முற்பட்ட வேளையிலேயே தோட்ட தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதையை மூடி ஆர்பாட்டத்தையும் தங்களின் எதிர்பையும் மேற்க் கொண்டுள்ளனர்.

a (7)

தங்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்னவுகளையும் தங்களுக்கும் காணியை கொடுத்து விட்டு மிகுதியானவையை வேறு யாருக்கும் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். தாங்கள் முறையான வருமானம் இன்று பிள்ளைகளுடன் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் என்றும் கூறினர். அன்மை காலமாக தெல்தோட்ட பிரதேசத்தில் இவ்வாறு தோட்டங்களை தனியாருக்கு பிரித்து கொடுக்கும் செயற்திட்டம் அதிகரித்து வரகின்றது இதனால் அப்பாவி தோட்ட மக்கள் பாதித்து வருகின்றனர்.

அதனால் சம்பந்தபட்டவர்கள் உடனடியாக இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். இந்த விடயம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர். அரசாங்கத்தின் புதிய திட்;டத்தன் படி இவ்வாறான தோட்டகளில் முதலில் தோட்ட மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணிகளை வழங்கி விட்டு மீதியானவையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கி வருமானத்தை பெருவதாகும். இதில் தொழிலாளர்களுக்கு காணி வழங்காமல் தனியாருக்கு வழங்கியது ஒரு கேள்விக்குறிய விடயமாக கருதப்படுகின்றது.

பா.திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here