இராட்சத முதலை கடற்கரையில் தெருநாய்களை வேட்டையாடுவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். தெஹிவளை, ஆபன் வீதிக்கு முன்னால் உள்ள கடற்கரையில் 8 அடி நீளம் மதிக்கத்தக்கதாக சந்தேகிக்கப்படும் முதலை ஒன்று நேற்று (12) காணப்பட்டதாக அறியமுடிகின்றது.
இன்று காலை 08.15 மணியளவில் கடற்கரையிலிருந்து முதலை கரைக்கு வந்ததையடுத்து அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.மேலும், இராட்சத முதலை கடற்கரையில் தெருநாய்களை வேட்டையாடுவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இன்றைய தினம் கடலுக்கு மீன்பிடிக்குச் செல்லத் தயாரான மீனவர்கள், கரையில் முதலையைக் கண்டதையடுத்து, கடற்கரையை தவிர்த்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் சுழியோடி ஒருவர் மீது முதலை தாக்கியதைத் தொடர்ந்து, மேற்படி கடல் பகுதி டைவிங் மற்றும் கடல் நீச்சலுக்கு ஆபத்தானதாகக் கருதப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.