முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் அக்கட்சியின் தலைவரை கடத்தி வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவருக்கு விளக்கமறியலிடப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் வழக்கொன்றை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளையிலேயே நுகேகொடை நீதிவான் இந்த தீர்ப்பை வழங்கினார்.