இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த வருட வீழ்ச்சியின் பின்னர் அடுத்த வருடம் முழுமையாக மீளும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
“அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய தொழில் துறையான தேயிலை உற்பத்தி , 2022ல் 16 சதவீதம் சரிந்து 251.5 மில்லியன் கிலோகிராமாக இருந்தது.
உரப் பிரச்சினையால் இவ்வாறு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அடுத்த வருடத்துக்குள் அது சரியாகிவிடும்” என்று நசீர் அஹமட் கூறியுள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில், எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு செய்த சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.