தேயிலை மலைகள் காடாகுவதை வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை தோட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்

0
179

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முக்கியமாக தேயிலை நிலங்கள் காடாக்கப்பட்டு வருவதால் தேயிலை மலைகளை தூய்மையாக வைத்து தேயிலை செய்கையை ஊக்குவிக்க தோட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இவர் குறிப்பிடுகின்ற போது நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தலைநகரில் பணிபுரிந்த சிலர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மீண்டும் தம் சொந்த ஊர்களுக்கே திரும்பியுள்ளனர்.அதுமட்டுமல்ல தேயிலை தோட்டங்களிலும் வேலைகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மலையகத்தில் அநேகமான தேயிலை மலைகள் காடாகின்றன.காரணம் தோட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாத நிலையே இந்நிலைக்கு காரணமாகும்.அதுமட்டுமல்ல நாட்டின் டொலர் வருகைக்கு தற்போது பெரும் பங்கு தேயிலையே காணப்டுகின்றது.அந்த தேயிலை மலைகளை பராமரிக்க வேண்டியது தோட்ட நிர்வாகத்தின் பாரிய பொறுப்பாகும்.

தேயிலை தோட்டங்கள் காடாகுவதால் குளவி தாக்குதல்,வனவிலங்குகள் தோட்டப்பகுதிகளில் உட்புகுதல் உட்பட பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.எனவே எதிர்வரும் காலங்களிலாவது தேயிலை மலைகளை காடாக்காமல் பராமரிக்க வேண்டியது தோட்ட நிர்வாகங்களின் பாரிய பொறுப்பாகுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here