தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்தவரை கைது செய்ய வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

0
149

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொத்மலை பிரதேச சபைக்கு கெட்டபுலா பகுதியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட ஒருவர் இருக்கையில், தேர்தல் நடைபெற இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கடந்த 8ம் திகதி தீடிரென தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர் என தெரிவிக்கப்படும் ஒருவர் நான் தான் இந்த தேர்தலில் கெட்டபுலா வட்டாரத்திற்கு யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், எனக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கும் அத்தோட்டத்தின் வாக்காளர்கள் இவரை உடனடியாக கைது செய்யும் படி 18.02.2018 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கெட்டபுலா மேற்பிரிவு தோட்ட ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதில் சுமார் 100ற்குட்பட்ட மக்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொத்மலை பிரதேச சபைக்கு உள்ளடக்கப்பட்ட கெட்டபுலா வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக எம்.முத்துகுமார் என்பவர் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டுவுள்ளார். இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திலும் ஒருவர் போட்டியிட்டுவுள்ளார். இவர்கள் இருவரும், வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டுவுள்ள நிலையில் தேர்தலுக்கு இரண்டு தினங்கள் எஞ்சியுள்ள காலப்பகுதியில் கெட்டபுலா பகுதியை சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் என கூறப்படும் ஒருவர் இந்த வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் எம்.முத்துகுமாருக்கு பதிலாக தான்தான் போட்டியிடுவதாக தெரிவித்து, தனக்கே வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என கோரி தேர்தலுக்கான வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார்.

DSC02451 DSC02460 DSC02465 DSC02449

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்த முத்துகுமார் என்பவர் இவ்வட்டாரத்தில் வெற்றியீட்டிவுள்ளார். இவருக்கு பதிலாக போட்டியிடுவதாக கூறி பொய் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதால் இவர் வெற்றியீட்டியிருப்பதாகவும், இவருடைய பொய் பிரச்சாரத்தினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காமல் போயிருப்பதாகவும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்த தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர் என கூறுபவரை தேர்தல் சட்ட விதிகளின் படி கைது செய்யுமாறு வழியுறுத்திய நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

அதேவேளை குறித்த நபர் மீதான முறைபாட்டை நுவரெலியா தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயத்தின் தெரிவித்தாட்சி அதிகாரிக்கு முறையிட்டுள்ளதுடன், தேர்தல் முறைபாட்டு பகுதிக்கும் தெரிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் முறையான நடவடிக்கை இதுவரை தொடரவில்லை என்பதை வழியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறு தேர்தல் மோசடியில் ஈடுப்பட்டவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here