தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் 07.05.2018. திங்கள் கிழமை மாலை 06மணி அளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இ.தொ.கா. ஆதரவாளர் ஒருவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் இந்த மோதல் சம்பவத்தில் தாக்குதல் நடாத்திய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் 03பேர் தப்பி சென்றுள்ளதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .நுவரெலியா மற்றும் தலவாகலையில் இடம் பெற்ற மேதின நிகழ்விற்கு சென்று திரும்பிய இரு தரப்புகளையும் சார்ந்த இரண்டு பேருந்துளும் ஒன்றுக்கு பின் ஒன்று வந்து கொண்டிருந்தவேலை நோர்வூட் பகுதியில் வைத்து இ.தொ.கா.ஆதரவாளர்கள் சென்ற பேருந்தினை முந்திசெல்ல முற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சென்ற பேருந்து முற்பட்டவேலையில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
இதேவேலை இரண்டு ஆதரவாளர்கள் சென்ற இரண்டு பேருந்துகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த பேருந்துகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
இதேவேலை கைதுசெய்யபட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளரை 08.05.2018.செவ்வாய் கிழமை அட்டன் நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதோடு தப்பி சென்ற 03 தொ.தே.ச.ஆதரவாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)