மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெப்பமண்டல ஒருங்கிணைந்த வலயத்தின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மலையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன்கூடிய மலை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.