தொடர் விடுமுறையில் உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா நோக்கி படையெடுப்பு தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் தெரிவிப்பு.

0
197

சித்திரை புது வருடத்திற்கு பின் இந்த வாரத்தில் மூன்று நாள் தொடர் விடுமுறை காணப்படுவதுனால் நுவரெலியாவினை நோக்கி அதிகமான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருபவர்களில் அதிகமானவர்கள் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாததன் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் மாத்திரம் ஹட்டன் நுவரெலியா வீதியூடாக நுவரெலியாவை நோக்கி வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 300 அதிகமான வாகனங்கள் சென்றதாக நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தெரிவித்தனர்.

சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக சென்கிளையார் மற்றும் டெவோன் நீர் வீழ்ச்சி பகுதிகளில் பெரும் எண்ணிக்கையானோர் வந்து செல்வதனை காணக்கூடியதாக இருந்ததுடன் இவர்களில் அதிகமானவர்கள் முகக்கவசமின்றியும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத நிலையே காணப்பட்டன.

நாடு தற்போது தீவிர கோவிட் தொற்றுபரவலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலையிலிருந்து பாதுகாக்கபட வேண்டும் என்றால் சுகாதார விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே நேரம் டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் மரங்கள் கிளைகள் நீர் வீழ்ச்சியினை முழுமையாக பார்வையிட முடியாது மறைப்பதகவும் எனவே இதனை முழுமையாக பார்வையிடுவதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றுலா பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம், டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here