தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் மது போதையில் தங்கியிருந்த இ.தொ.கா.வின் உறுப்பினர் ஒருவர் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சந்தரலிங்கம் பிரதீப்பிடம் கையும் களவுமாக மாட்டிகொண்டார்.
ஹட்டன் பகுதியில் இயங்கி வரும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நான்கு மாடி கட்டிடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் மது போதையில் அறை ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சந்தரலிங்கத் பிரதீப்பிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் புதன்கிழமை (12) இடம் பெற்றிருந்தது நீண்டகாலமாக பாவனைக்கு உட்படுத்தப்படாத குறித்த கட்டித்தை பிரதி அமைச்சர் பார்வையிட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
நீங்கள் இங்கு இருப்பதற்கு என்ன காரணம் என அமைச்சர் கேள்வி எழுப்பியதற்கு தனக்கு சுகயீனம் காரணமாக இங்கு தாம் இளைப்பாரி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். குறித்த இடத்தில் இளப்பார முடியாது எனவும் தங்களுக்கு தங்களின் உடல் நிலை சீராக இல்லாவிட்டால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற முடியும் தொழில் நேர காலப்பகுதியில் இது போன்ற விடயங்களை உள்வாங்க முடியாது ஆகையால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்
இதேவேளை குறித்த கட்டிடத்தில் உள்ள அறைகளில் மக்களின் பயன“பாட்டிற்கும் வழங்கப்படாமல் இருந்த உபகரணங்கள் சிலவற்றை இனங்கான முடிந்தது. மக்கள் மத்தியில் போய் செல்ல வேண்டிய உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த கட்டிடத்தில் உள்ள சில அறைகளை பார்வையிட வேண்டும் என அமைச்சர் கோரிய போதும் ஒரு சில அறைகளுக்கு எம்மிடம் சாவிகள் இல்லையென பதில் வழங்கியதை அடுத்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.