தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி வைப்பு!

0
158

தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி வைப்பு – இராதகிருஸ்ணன்
வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 15.02.201 அன்று கல்வி அமைச்சின் ஊடாக நியமனம் வழங்குவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடு திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (12.02.2018) கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்னால் வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.இதன்போது அவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 15.02.2018 அன்று கல்வி அமைச்சின் மூலமாக நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் அநேகரின வேண்டுகோளுக்கு இணங்க அந்த நியமனம் பிற்போடப்பட்டள்ளது.அதற்கு காரணம் அந்த வழங்கப்படவிருந்த நியமனத்தில் ஒரு சிலருடைய தகவல்கள் முறையாக இல்லாத காரணத்தால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படவில்லை எனவே இது தொடர்பாக பலரும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.அதனை தொடர்ந்தே இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது அதற்கு பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளார்.எனவே எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்பு அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் அமைதியாக இருந்து அதனை பெற்றுக் கொளளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.இதற்காக போராட்டம் செய்வதை நிறுத்துமாறும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here