வெசாக் பண்டிகை அனுஷ்டிக்கப்படும் வாரத்தில் உலக தொழிலாளர் தினமும் வருகின்றது.இது தொடர்பில், மஹாநாயக்கர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மே மாதம் 7ம் திகதி மே தினத்தைக் கொண்டாடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அங்கு தெரிவித்தார்.
இலங்கை அமரபுர மஹா சங்க சபாவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள இலங்கை அமரபுர மஹா நிக்காயாவின் சூலங்கந்தி பீடத்தின் மஹாநாயக்கர் அதி சங்கைக்குரிய கங்துனே அஸ்ஸஜி தேரருக்கான உரிமைப்பத்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று பங்கேற்றார்.இதன்போது ஜனாதிபதி அங்கு இதனை குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த வைபவம் இடம்பெற்றது. தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகம் முன்னேறியுள்ள போதிலும்இ மனித உள்ளங்களை ஆறுதல்படுத்தி ஒழுக்கம் மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப அது துணைபுரியவில்லை என ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார்.