ஓரளவு படித்த இளைஞா்கள் கொழும்புக்கு சென்று அவ்வப்போது வருமானம் தரும் தொழில் ஈடுபடுவதே தற்போது ஒரு கலாச்சாரமாக உள்ளது.
இவா்களால் வாழ்க்கையில் முன்னேற முடிவதில்லை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் போது கூட எந்தவித தொழில் பயிற்சியும் இல்லாததால் அங்கும் கூட குறைந்த சம்பளத்திற்கான தொழிலையே செய்ய முடிகிறது.
தொழில் பயிற்சி பெற்றவா;களுக்கு தற்போது உள்ளுரிலும் வெளிநாட்டிலும் பெருந் தொகையான வேலைவாய்ப்புக்கள் இருந்தாலும் பெருந்தோட்ட பகுதியில் தொழிற்பயிற்சி பெற்றவா்கள் இல்லாததான் காரணமாக இந்த வேலைவாய்ப்புக்களை பெற முடியவில்லை.
இந்த சூழலில் இளைஞருக்கும் ஆர்வமுள்ளவா்களுக்கும் தொழில் பயிற்சி தொடா்பாக வழிகாட்டுதலுக்கான கருத்தரங்குகளை நடத்த பிரிடோ நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கருத்தரங்குகளில் பங்குபற்றுவதன் மூலம் நல்ல ஒரு தொழில் பயிற்சியை பெற்று உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல தொழில் வாய்ப்பை பெற வாய்ப்புள்ளது.
இந்த பின்னனியில் முதலாவது தொழில் வழிகாட்டல் பயிற்சி இம்மாதம் 23ம் திகதி காலை 9.00 மணிக்கு மஸ்கெலியா பிரன்ஸ்விக் கோயில் மண்டபத்திலும் அதே நாளில் அதாவது 23ம் திகதி காலை 9.00 மணிக்கு நானுஓயா காந்தி மண்டபத்திலும் இரண்டாவது கருத்தரங்கு 23ம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு லிந்துலை லிப்பகலை பிரிடோ முன்பள்ளி மண்டபத்திலும் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்குகளில் பங்குபற்றி பயன்பெறுமாறு இளைஞா் யுவதிகளையூம் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களுக்கும் பிரிடோ நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு 0772277425 அல்லது 0772277441 ஆகிய இலக்கங்களுடனும்இ நானுஓயா லிந்துலை பகுதியில் உள்ளவா்கள் 0776988135 0772277426 தொடா்பு கொள்ளலாம்.
அக்கரப்பத்னை நிருபர்