தோட்டப்பகுதிகளில் தற்போது பல விபத்துக்களும் பாதிப்புக்களும் ஏற்படுகின்றது இதற்கு தோட்ட நிர்வாகங்களின் அசமந்த போக்கே காரணமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ராகலையில் ஏற்பட்ட டிரக்டர் விபத்து, லிந்துலையில் மரமுறிந்து விழுந்தமையால் ஏற்பட்ட பாதிப்பு என்பன தொடர்பில் பொதுமக்களும்,தொழிற்சங்கமும் ஏற்கனவே தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவித்தும் அவர்கள் அசமந்த போக்கிலேயே செயற்பட்டமையினாலேயே தற்போது அவை மக்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.
இனியும் இவ்வாறான பாதிப்புக்களை குறைக்க தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களாலும் தொழிற்சங்கங்களாலும் தோட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படுகின்ற குறைப்பாட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் இவ்வாறான பாதிப்புக்களை தடுக்கமுடியும் என வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்