“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு ஜனவரி முதல் கிடைக்கப்பெறும். ஜனவரி மாதத்துக்குரிய சம்பளம் பெப்ரவரி 10 ஆம் திகதியே வழங்கப்படும். அப்போது அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும்.”
இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
“தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான யோசனை பாதீட்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை மீளப்பெற முடியாது.
அரசாங்கம் 200 ரூபா, பெருந்தோட்ட நிறுவனங்கள் 200 ரூபா பங்களிப்பு செய்கின்றன. பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” எனவும் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.




