கொரோனா தொற்று மலையகத்தில் தீவிரமாக பரவிக்கொண்டு வருகின்றது இந்நிலையில் விரைவாக தோட்டத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.நாள்தோறும் தொற்றாளர்களும் இணங்காணப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்வதால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டால் பாரிய சிக்கல்களை அனுபவிக்க நேரிடும் எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்