தோட்டப் பகுதி மக்களுக்கும் கொரானா நிவாரணம் வழங்கப்படும் : கல்யாணகுமார் தெரிவிப்பு.

0
222
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்ட தோட்டங்களில் வாழுகின்ற மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று  அம்பகமுவ பிரதேச செயலாளர் தன்னிடம் உறுதி வழங்கியுள்ளார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான ப.கல்யாணகுமார் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை உரிய தோட்டங்களுக்குரிய கிராம சேவகர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பல தோட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here