தோனியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!

0
169

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மாமியார் ஷீலா சிங் நடத்தி வரும் கம்பெனியின் சொத்து மதிப்பு சுமார் 800 கோடி என தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த தலைவர் என்ற பெயரை பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, ஐசிசி நடத்திய 3 வகையான போட்டிகளிலும் இந்திய அணிக்காக கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி சுமார் 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 15,000 ஓட்டங்கள் இந்திய அணிக்காக சேர்த்துள்ளார்.

2019ம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

இதற்கிடையில் விளம்பரம், விவசாயம் மற்றும் சினிமா என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் தோனி கிட்டத்தட்ட 1040 கோடிக்கு சொத்துக்களை சம்பாதித்துள்ளார்.

தோனி சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருந்த நிலையில், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக தோனியின் மாமியார் லீலா சிங் நியமிக்கப்பட்டார்.

தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது எல்ஜிஎம்- LGM (Let’s Get Married) என்ற தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்து வரும் நிலையில் அதன் சொத்து மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 800 கோடியை தாண்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி முக்கிய பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here