16-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகிறது.
அதன்படி இன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது.
முதலாவது ஆட்டத்தில் சுப்மன் கில்லும், அடுத்த ஆட்டத்தில் சாய் சுதர்சனும் அரைசதத்தை தாண்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.மேலும் துடுப்பாட்டத்தில் விருத்திமான் சஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஹர்திக் பாண்ட்யா சிறந்த வரிசை காணப்படுகிறது. பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோழ்வி அடைந்தது
அடுத்த ஆட்டத்தில் அதிரடியாக செயல்பட்டு 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது.முந்தைய வெற்றி உத்வேகத்துடன் கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
இருப்பினும் வலுவான குஜராத் அணியை அசைப்பது என்பது கொல்கத்தாவுக்கு எளிதான விடயமாக இருக்காது.அத்தோடு கேன் வில்லியம்சன்னுக்கு பதிலாக இலங்கையின் சகலதுறை வீரரான தசுன் சானக்க களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.