நடிகர் சத்யராஜுக்கு கொரோனா !

0
204

கொரோனா 3வது அலை பரவ துவங்கியுள்ளது என கூறப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா 3வது அலை பரவ துவங்கியுள்ளது என கூறப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் த்ரிஷா மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் நடிகர் சத்யராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here