நடிகர் விஜயின் அரசியல் பயணம் : சீமான் வெளியிட்ட தகவல்

0
142

அடுத்த ஆண்டு முதல் நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் முழு நேர அரசியல்வாதி ஆகி விடுவார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று (2)செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது

தமிழ்நாட்டில் தம்பி விஜய் படத்தின் பாட்டு வெளியிடவிடாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன? திமுகவுக்கு என்ன வந்துச்சு?விஜய்க்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? இவ்வளவுதான் ரசிகர் வரனும்னு சொல்றீங்க.. நீங்க மாநாடு நடத்தும் போது இவ்வளவுதான் தொண்டர் வரனும்னு சொல்றீங்களா?

ஐயா ஸ்டாலின் அல்லது தம்பி உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்கு இவ்வளவுதான் தொண்டர்கள் வரனும்னு சொல்றீங்களா? அப்படி எதுவும் விதி இருக்கிறதா? உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுக்க காவல்துறை இருக்கிறது. வேலை செய்ய முடியுது? ரகுமானுக்கும் விஜய்க்கும் கொடுக்க முடியாதா? கொடுக்க முடியாதான்னு சொல்லுங்க?இன்னும் ஒரு வருஷத்தில் நடிக்கிறதை விஜய் நிப்பாட்டிருவாரு.. உன் தியேட்டர் தயவு அவருக்கு தேவைப்படாது. அப்ப அரசியல் பேசினா என்ன பண்ணுவீங்க?

அதான் பிரச்சனை. அன்னைக்கு நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் போராடுச்சு.. இன்னைக்கு போராடினா திமுக ஆட்சிக்கு எதிராக இருந்துவிடும்.. அதனால போராட யாரையும் அனுமதிக்க மாட்டாங்க.. என்று சீமான் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here