நடிகர்கள் கொண்டாடும் ‘டுவரிஸ்ட் பெமிலி’

0
5

சென்னை, அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டுவரிஸ்ட் பெமிலி’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

கடந்த மே மாதம் வெளியான இந்த திரைப்படம் 4 வது வாரமாக வெற்றி நடை போடும் நிலையில் பல்வேறு நடிகர்களும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி, சூர்யா, நானி ஆகியோரை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பும் பாராட்டியுள்ளார்.

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டுவரிஸ்ட் பெமிலி’ திரைப்படம் ஜப்பானிலும் வெளியானது. இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் இந்திய ரூபாயில் 86 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here