நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

0
161

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பர்ஹானா’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘பர்ஹானா’ திரைப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here