நடிகை சொர்ணமால்யா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0
32

நடிகை சொர்ணமால்யா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் சில தினங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையம், முன்னாள் தலைமைச்செயலர், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மிரட்டல் இ-மெயில் கடிதங்கள் டிஜிபி அலுவலகத்துக்கே வருகின்றன. அந்த வகையில் நடிகை சொர்ணமால்யா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள் ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்தது. இதையடுத்து, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டுக்கு வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வீடு மற்றும் வீட்டு வளாகம் முழுவதும் தேடினர்.

சோதனையின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து அது புரளி என உறுதி செய்யப்பட்டது. இதேபோல், சென்னையில் மேலும் சில யூடியூபர் வீடுகளுக்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கெனவே, வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகிறனர். அதனுடன் இதையும் சேர்த்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here