நன்மைகள் பல தரும் நவராத்திரி விரம் இன்று ஆரம்பமானது.

0
260

நன்மைகள் பல இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திர விரதம் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று (07) திகதி ஆரம்பமானது.

இந்த நவராத்திரி விரதத்தினை முன்னிட்டு மலையக ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் வீடுகளிலும் பல்வேறு நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்களிப்புடன் இன்று இடம்பெற்றன.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியில் நவராத்திரி விரத ஆரம்ப நிகழ்வு பாடசாலையின் அதிபர் மூக்குபிள்ளை மூவேந்தன் தலைமையில் நடைபெற்றது. பாடசாலையில் உள்ள சிவலிங்க ஆலயத்தில் நடைபெற்ற இப்பூஜையில் விநாயகர் வழிபாடுகள் யாகபூஜை, இடம்பெற்று சிவலிங்கப்பெருமானும் பால் தேன், நெய், எண்ணை முதலான அபிசேக பொருட்களில் அபிசேகம் இடம்பெற்று கொலுவைத்து அதனை தொடர்ந்து நவராத்திரி விசேட பூஜைகள் இடம்பெற்றன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம்,  நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற

அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம்.

இன்று தொடக்கம் ஒன்பது நாட்கள் சக்தியை வீரத்தின் வடிவமான துர்க்கையாகவும், செல்வத்தின் வடிவமான இலட்சுமியாகவும், கல்வியின் வடிவமான சரஸ்வதியாகவும் விரதமிருந்து வழிபடுவது வழக்கமாகும். பத்தாம் நாள் விஜயதசமி. அன்றைய தினம் ஏடு தொடங்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம்.

மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்குகிறது நவராத்திரி 2021 10.07 இன்று தொடக்கம். இது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இலையுதிர் காலம் தொடங்கும் போது இந்த நவராத்திரி வருவதால் இது சாரதிய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. சாரதிய நவராத்திரி 2021 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here