நேற்றைய தினம் குயின்ஸ்பெரி நமநாதர் ஆலயத்தில் நடைபெற்ற யாகபூஜை நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் நுவரெலிய காயத்திரி பீட சீடரகளான நரசிங்க சித்தர் நவநீதன் சுவாமிகளாலும் காகபுஜண்டர் கோபிநாத் சுவாமிகளாலும் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஐந்நூறுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்துக்கொண்டமை சிறப்பு அம்சமாகும்.அத்தோடு நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பக்த அடியார்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.
இனிவரும் காலங்களில் பௌர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு சித்தர் பூஜைகளில் கலந்துக்கொள்ளும்படி ஆலயம் அழைப்பு விடுகின்றது.



ஷான் சதீஸ், புஷ்பராஜ்



