நரை முடி பிரச்சினை: இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

0
154

நரைமுடி இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.

இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

மேலும் பலரும் நரை முடி மறைய பல்வேறு மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடி கருப்பாக கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு ஒவ்வாமைகளும் ஏற்படுகின்றன.

இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது. எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் நரை முடி கருப்பாக மாற என்ன செய்யலாம் என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள்.

நரை முடி மறைய அரிசி ஊறவைத்த தண்ணீர் சிறந்து விளங்குகிறது.

இந்த நீரை பயன்படுத்தி தலை அலசினால், தலை முடி வலிமை பெரும், தலை முடி அடர்த்தியாக வளரும், நரை முடி கருமையாக மாறும்.

இந்த அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி, தலை முடியை எப்படி கருமையாக மாற்றலாம் என்று இப்போது நாம் காண்போம்.

நரைமுடி மறைய – தேவைப்படும் பொருட்கள்:
அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கோப்பை
திரிபலா சூரணம் – இரண்டு தேக்கரண்டி
நெல்லிக்காய் பொடி – இரண்டு தேக்கரண்டி
விட்டமின் இ மாத்திரை – ஒன்று
வெள்ளை முடி கருப்பாக – செய்முறை:

நரை முடி கருப்பாக்க ஒரு கோப்பை அரிசியை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் தண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

24 மணிநேரம் அரிசி நன்றாக ஊறியதும், அந்த நீரை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அந்த நீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணம், இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தடவுங்கள்.

பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும். எனவே நரைமுடி மறைய இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வர நரைமுடி கருப்பாக மாறும் முடி உதிர்வு பிரச்சனை நீங்கும், முடி கருப்பாக மற்றும் அடர்த்தியாக வளரும்.

நரைமுடி மறைய வெந்தயத்தை அரைத்து தலையில் தடவியோ அல்லது இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை எடுத்து தலைக்கு அலசியோ வந்தால் நாளடைவில் நரைமுடி கருமையாக மாறும்.

சரியான உணவு பழக்கவழக்கம் இன்றி இருப்பது. சரியான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் தலை முடி வெண்மை நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.

உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ நரைமுடி வர காரணமாகும்.

அதேபோல் அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி வருகிறது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு (Hydrogen peroxide) அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதால் அது முடிகளை பாதித்து கருமை நிறத்தை மாற்றி வெண்மை நிறத்தை கொடுக்கிறது. மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

உணவு நரைமுடி கருமையாக உணவு உணவில் கருவேப்பிலையை அதிகளவு சேர்த்து கொண்டு வந்தாலே போதும் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

அதேபோல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு கருவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டு வரலாம் இவ்வாறு செய்வதினால். முடி உதிர்வு பிரச்சனை நீங்கும். முடி அடர்த்தியாக வளரும்,

குறிப்பாக நரை முடி பிரச்சனை சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here