நரைமுடிக்கு நிரந்தர தீர்வு – இதை செய்தால் போதும் உடனடிபலன்

0
177

பொதுவாக தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படும் கவலைகளில் ஒன்று இந்த இளநரை பிரச்சினை. இந்த பிரச்சனையால் ஆண் – பெண் இருபாலருமே மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக சிலருக்கு சிறுவயதிலே நரைமுடி வந்துவிடுகின்றது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக பரம்பரை, மற்றும் தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும்.

தலைக்கு பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும். இவற்றை எளியமுறையில் கூட சரி செய்ய முடியும்.

தற்போது நரை முடியை போக்க கூடிய ஒரு எளியமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

தேவையானவை
கற்பூரவல்லி இலைகள்
விட்டமின் E கேப்ஸ்யூல் – 1
எலுமிச்சைப் பழச்சாறு – 1
இரண்டு ஸ்பூன் தண்ணீர்
செய்முறை
நன்றாக கற்பூரவல்லி இலைகளை கழுவி விட்டு காம்புகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் மிக்சி ஜாரில் போட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை அப்படியே ஒரு சின்ன கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.இதில் விட்டமின் E கேப்ஸ்யூல் – 1, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு எலுமிச்சைப் பழச்சாறு – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை அப்படியே உங்களுடைய நரை முடியின் மேல் அப்ளை செய்து விட வேண்டும்.

40 லிருந்து 45 நிமிடம் வரை இது உங்களுடைய தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு ஷாம்பூ சீயக்காய் எல்லாம் போடக்கூடாது.

வெறும் தண்ணீரில் உங்களுடைய தலையை அலசி விட வேண்டும்.

இந்த பேக்கை தலையில் போட்டதும் லேசாக எரிச்சல் இருப்பதாக சில பேருக்கு தெரியும். இருந்தாலும் பரவாயில்லை. அது அந்த இலையின் தன்மைதான். அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.

இந்த பேக் வேர்கால்களில் பட்டாலும் எந்த பிரச்சனையும் வராது. தொடர்ந்து 10 வாரங்கள் இந்த பேக்கை வாரத்தில் 3 நாட்கள் என்ற கணக்கில் உங்களுடைய தலையில் போட்டு வாருங்கள்.

நிச்சயமாக நரை முடியில் நிறம் மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here