நலமுடன் இருக்கிறேன் : மகிந்த அறிவிப்பு

0
125

தனது உடல்நிலை குறித்து சமுக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை மறுத்துள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

களனி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,தான் நலமுடன் இருப்பதாகவும் சமுக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

“நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேனா அல்லது நல்ல நிலையில் இருக்கிறேனா என்பதை நீங்கள் பார்க்கலாம். சமுக ஊடகங்களில் இடுகையிடுவதை ஒருவர் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என்று அவர் கூறினார்.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக இனியும் நீடிக்க முடியாது எனவும், இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here