நல்ல வரன் அமையும்… இன்றைய ராசிபலன் 26.01.2026

0
35

மேஷம்

பழைய திட்டங்களை மீண்டும் தொடருவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பண விஷயங்களில் கவனம் தேவை. மன அழுத்தம் குறையும். நீண்ட கால ஆசை நிறைவேறும். வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்குவர். இடம், மனையால் லாபம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மிதுனம்

முன்பை விட தற்பொழுது தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் தங்கள் லாபத்தை பெறுவர். உத்யோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். தேடிய பொருள் வந்தடையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தேகம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

கமிஷன் தொடர்பான வேலைகள் நல்லபடியாக முடியும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. தங்கள் உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்களை பாராட்டுவர். வெளியிடங்களில் உண்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். நல்ல வரன் அமையும். சளித் தொந்தரவு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

செலவுகள் கட்டுக்குள் வரும். பணவரவுக்கு பங்கமில்லை. உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் நினைத்த பொறுப்புகள் வந்தடையும். மனைவி சொன்ன நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நடைபாதை வியாபாரிகள் சுபிட்சம் காண்பர். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். நண்பர்களுடன் வெளியே செல்வீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடுமபத்தலைவிகளுக்கு பணவரவில் பிரச்சினை இல்லை. உத்யோகத்தில் அமைதி நிலவும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு கணிசமான தொகை கைக்கு கிடைக்கும். நினைத்த காரியம் பலிக்கும். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

தனுசு

தம்பதிகளிடையே நல்ல புரிதல் ஏற்படும். எதிர்காலத்திற்காக வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். உத்யோத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

காதலர்கள் வீண்சந்தேகத்தை நிறுத்துவது நல்லது. தங்கள் கடமையை ஆற்றுவது நன்மை தரும். வியாபாரிகளுக்கு இருந்த நஷ்டங்கள் நீங்கும். நினைத்த நபரை சந்திப்பீர்கள். அவர்கள் உதவி கிடைக்கும். பணப்பற்றாக்குறை தீரும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும்.

கும்பம்

வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். வியாபாரத்திற்கான வங்கிக் கடன் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

பணத்தினைப் பற்றியும் மற்றும் சேமிப்பினைப் பற்றியும் எப்படி கையாள்வது என்ற எண்ணம் தோன்றும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். புதிய ப்ராஜக்ட் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here