நல்லாட்சி காலத்தில் எந்த ஒரு ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரி;யர் நிரந்தரமாக்கு தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எந்த வித நடவடிக்கைகளையும் மேற்ககொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்pன் சிரேஸட்ட உபதலைவர்களில் தலைவர்களில் ஒருவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்று உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று (28.12.2012) திகதி ஹட்டனில் நடைபெற்றது அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மத்திய மாகாணத்திலே 300 உதவி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தி வருகிறார்கள். ஆனால் அந்த 306 நியமனங்களை வழங்குவது தொடர்பான முழுமையான அழுத்தத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிம் எங்கள் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களும் வழங்கி வந்திருக்கின்றோம்.
கடந்த நல்லாட்சி காலத்திலே ஒரு உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் கூட வழங்கப்படாத நிலையில் இந்த வருடத்தில் மாத்திரம் நாங்கள் 900க்கும் அதிகமான நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். அந்த வகையில் எஞ்சியிருக்கும் 306 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை எங்களது அழுத்தத்தினால் மத்திய மாகாண கல்வி அதிகாரிகள் செய்திருந்த போதும் தற்போது அவர்கள் அமைச்சர் பெசில்
ராஜபக்ச அவர்களின் அனுமதியை பெறுவதற்கு காத்திருப்பதாக எமக்கு தெரிவிக்கிறார்கள்.
இந்த வகையிலேயே இந்த நியமனங்கள் வழங்குவதது தாமதப்படுவது குறித்து நாங்கள் கவலையடைகின்ற நிலையிலே நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் நியமனத்தை தள்ளிவைத்து அதில் நாங்கள் அரசியல் செய்ய முற்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
நியமனங்களை வழங்குவதன் மூலம் தான் அரசியல் செய்ய முடியுமே தவிர நியமனங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் எவ்வாறு அரசியல் லாபம் தேடிமுடியும் என்று திரு வேலுகுமார் அவர்களுக்கு தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் முன்னாள் அமைச்சர் ராதாகிருஸ்ணன் அவர்கள் இந்த நியமனம் தொடர்பாக கருத்து வெளியிட்டுருக்கின்றார் இவர் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த போது இந்த நியமனங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் கூட அதை வழங்காமல் விட்டுவிட்டு தற்போது நாங்கள் நியமனங்களை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை விமர்சிப்பது வேதனையாக இருக்கின்றது.
அதேநேரத்தில் இந்த ஆசிரியர் உதவியாளர்கள் கலாசாலைக்கு செல்வதைக்கூட தடுத்தவர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர். இந்த நிலையிலேயே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் வழங்கப்பட்ட உதவி ஆசிரியர் நியமனங்களுக்கு முழுமையான நியமனங்களை வழங்குவது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே முழுமையான கவனத்தை செலுத்தி யிருக்கின்ற போது எதிர்க்கட்சி என்பதற்காக எல்லா விடயங்களையும் எதிர்த்துக் கொண்டு நாங்கள் செய்கின்ற நல்ல விடயங்களையும் விமர்சிப்பது பொருத்தமானதாக இருக்காது.
தரமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் அந்த வகையிலே கல்வி ராஜாங்க அமைச்சர் அவரது காலத்தில் விட்ட தவறுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிவர்த்தி செய்து அவர்களுக்கு நியமனம் வழங்கும் வேலைகளை மேற்கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்