நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் : பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

0
155

நாடாளவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நள்ளிரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து இந்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதறகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here