நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்

0
84

இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

பேருந்து கட்டணம் 5.27% குறைக்கப்படும் எனவும் இதன் காரணமாக குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களிடம் நாங்கள் ஒரு சிறப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கிறோம். இன்று நள்ளிரவு முதல் அரசு தரப்பு கூறும் விதத்தில் டீசல் விலை குறையுமாயின் பேரூந்து கட்டணமும் குறையும். பேருந்துக் கட்டணக் குறைப்பின் பயனை 100% பயணிகள் பெற வேண்டுமானால், அவர்கள் சில்லறைப் பணத்தை கொண்டு வர வேண்டும். இல்லையெனில், 30 ரூபாயாக இருந்த பேருந்துக் கட்டணம் 28 ரூபாய்க்கு மாற்றப்பட்டாலும் பிரச்சினைகள் எழும். பின்னர் இந்த இரண்டு ரூபாய் பிரச்சினை இருக்கும், மேலும் ஒவ்வொரு கட்டணத்திலும், இந்த இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here