கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த பயணிகள் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தின் சகல தொடருந்து சேவைகளும் ஆரம்பமாகவுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான தொடருந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, பிரதான மார்க்கத்தில் 50 தொடருந்து சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 64 தொடருந்து சேவைகளும் ஆரம்பமாகவுள்ளன.