தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வு போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கமும் தமிழ் முற்போக்கு கூட்டணியும்டிஆதரவு வழங்குவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்
அறிவித்துள்ளார்.
08.12.2018.சனிகிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனை தெரிவித்தார் இந்த ஊடக சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதிதலைவரும் முன்னால் கல்விஇராஜாங்க
அமைச்சருமான வேலுசாமி இரதாகிருஸ்னண் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
வடிவேல் சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பழனிதிகாம்பரம்….
‘கடந்த வாரம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதில்லை என அறிவித்திருந்தோம். காரணம் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத தருணத்தில் போராட்டம் பயனற்றது என்பது எங்கள் கருத்து. ஆனால் இன்று தோட்டங்கள் தோரும் திகாம்பரம் சம்பள போராட்டத்தை காட்டிக் கொடுப்பதாக பொய் பிரச்சாரங்கள் செய்கின்றனர்.
நான் தோட்டத்தில் இருந்து வந்தவன். மக்களை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன். அதனால் நானும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன். உறுதி அளித்தவர்கள் 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக் கொடுக்க வேண்டும். மக்களை ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றினால் மலையக மக்கள் எதிர்காலத்தில் சிறந்த பதிலடி கொடுப்பர்.
தனிப்பட்ட ரீதியில் தீர்மானம் எடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தேசிய தோட்டத்
தொழிலாளர் சங்கத்திற்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போது அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கவில்லை. இந்த போராட்டம் கம்பனிகளுக்கு எதிராக நடைபெறுகிறது. ஆனால் போராட்டத்திற்கு
அழைப்பு விடுத்தவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் குறைந்த சம்பளத்திற்கு கைச்சாத்திட்டு மக்களை காட்டுக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை.’
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)