சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளைய தினம் (30) விசேட நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளது.
அதற்கமைய, நாளை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11ஆவது பிரிவின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கத்தின் நிதி அறிக்கையை வெளியிடப்படும். இதற்கமைய நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அத்துடன் அரசாங்கத்தின் ஒத்திவைப்பு விவாதம் நாளை மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதேநேரம் , நாடாளுமன்றம் மீண்டும் ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.