நாட்டிற்கு வரவுள்ள 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல்

0
188

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி ,114,000 மெட்ரிக் டன் டீசலும், 60, 000 மெட்ரிக் டன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய , 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதியில் நாட்டை வந்தடையவுள்ளது.

மேலதிக டீசல் ஏப்ரல் மாதம் முதல் வார காலப்பகுதியில் கிடைக்கப்பெறும். எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு, சந்தர்ப்பம் இல்லை.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பிரவேசிப்பவர்கள் முன்னர் தாம் பெற்றுக்கொண்ட அளவினை காட்டிலும், தற்போது அதிகளவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here