நாட்டில் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர்!

0
140

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

அத்தோடு “தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மிரிஹான சம்பவத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அரசியல் ஸ்திரமின்மை நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசியல் ஸ்திரத்தன்மையை அடையாவிட்டால் இந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் இல்லாவிட்டால் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here