தங்காலை பரவி வெல்ல துறைமுகத்தில் இருந்து பயணித்த பல நாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது.
விபத்து சம்பவித்த சந்தர்ப்பத்தில், குறித்த மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்தனர், அவர்களில் 4 பேர் உயிர் தப்பினர்.
இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையியல் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளை முடித்து கொண்டு திரும்பி வந்தபோது இந்த விபத்து சம்பவித்ததாகவும், படகு பாறையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் தற்போது தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நேற்றையதினம் பல்வேறு இடத்திலும் படகுகள் விபத்துக்கள் பதிவாகி இருந்தன.
அதன்படி, நேற்று காலை,தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது, அதில் இருந்த ஐந்து மீனவர்களில் இரண்டு பேர் மீட்கப்பட்டனர், மேலும் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
இதேவேளை களுத்துறை பேருவளை மொரகல்ல பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஒரு மீன்பிடி படகும் விபத்துக்குள்ளானது, அதில் இருந்து இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
ஹிக்கடுவ மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடி படகும் நேற்று மதியம் துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் 6 மீனவர்கள் படகில் இருந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.