நாட்டில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

0
135

தற்போது தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சுமார் 1000 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்று நோய் நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ,சுற்றாடல் பாதிப்புகள் , வெற்றிலை போடுதல் , புகைத்தல் , மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணிகளால் இவ்வாறு புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” தேசிய புற்று நோய் நிருவகத்தில் தினமும் சுமார் 36 புதிய புற்று நோயாளிகள் பதிவாகின்றனர்.

அத்துடன் இந்த நிறுவகத்தில் மாத்திரம் மாதாந்தம் பதிவாகும் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.தற்போது தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சுமார் 1000 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளாந்தம் சுமார் 2000 புற்று நோயாளர்கள் கிள்னிக்குகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், நாடு முழுவதும் காணப்படும் வைத்தியசாலைகளில் உள்ள புற்று நோய் பிரிவுகளில் புதிதாக நோயாளர்களில் பதிவாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here