நாட்டில் வேகமாக பரவும் இன்புளுவன்ஸா வைரஸ்

0
89

நாட்டில் தற்போது இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுக்கின்றது.

இந்த இன்புளுவன்ஸா காய்ச்சல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக 2 வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு ரிஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here