நாட்டுக்காக அரும்பணியாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும்.

0
61

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து பொத்துவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தொடர்ந்து உரையாற்றுகையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை மீட்டெடுத்து குறுகிய காலத்துக்குள் வளமான நாடாக மாற்றியமைத்துள்ளார்.

நாட்டுக்காக அரும்பணியாற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் நன்றி விசுவாசமாகஇருக்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி மூலம் எமது பிராந்தியத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து இருளில் மூழ்கி இருந்த போது யாரும் முன்வரவில்லை. நாடும், சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு மீள கட்டியெழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here