நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை..

0
174

உயிரை இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாத்த நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். யுத்தத்தில் மக்கள் இறப்பதை நிறுத்திய நாங்கள், கோவிட் தொற்று நோயால் மக்கள் இறப்பதை நிறுத்த நடவடிக்கை எடுத்தோம்.

சவால்களை கைவிடாத இருந்த நேரத்திலேயே மக்களை தூண்டிவிடும் அமைப்புகள் ஆரம்பமாகின.அந்த இடத்தில் இருந்து என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முன்னர் அதற்கான ஆடைகளை தைத்து வைத்துள்ளனர்.இவர்கள் எவரும் நாடு கஷ்டத்தில் விழுந்த நேரத்தில் அந்த ஆடைகளை அணியவில்லை.

எமது கட்சி மிகப் பெரிய புரட்சியை செய்த கட்சி.இதனால்,எத்தனை சக்திகள் வந்தாலும் நாட்டில் மிகவும் பலமான கட்சி எமது கட்சி என்று நான் நம்புகிறேன்.அடுத்த தேர்தலில் எமது அணியே பலமிக்க அணியாக இருக்கும்.

எம்மீது சிலர் சேற்றை வாரி வீசுகின்றனர். நாங்கள் அந்த சேறு இருக்கும் இடத்தில் நின்று விட நாங்கள் தயாரில்லை.

இது நாம் அனைவருக்குமான தாய்நாடு. நாங்கள் உயிரை இரண்டாம் பட்சமாக கருதி காப்பாற்றிய நாடு.இதனால், எவரது தேவைக்காகவும் நாட்டை துண்டுகளாக பிரித்து பின்நோக்கி கொண்டு செல்ல இடமளிக்க மாட்டோம்.

போராட்டம் காரணமாக முற்றாக அழிந்து போகவிருந்த நாடு தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் வழங்கிய ஆணையே காரணம் என நான் நம்புகிறேன் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here