நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – சுகாதார அமைச்சு

0
229

சட்டத்திற்கு புறம்பாக நாட்டை விட்டு வெளியேரிய 103 விசேட வைத்தியர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர் முன் அறிவித்தல் இன்றி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய சம்பவத்தை அடுத்து, முன்னறிவிப்பின்றி வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, சுகாதார அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி இல்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் வைத்தியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டைவிட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், முன் அறிவிப்பு இன்றி ஒரு மருத்துவர் நாட்டை விட்டு வெளியேருவாராயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியதெரிவித்துள்ளார்.

இதனிடையே, சட்டத்திற்கு புறம்பாக நாட்டை விட்டு வெளியேரிய 103 விசேட வைத்தியர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேலும் பல வைத்தியர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here